எங்கள் இலக்கு

" சிறந்ததொரு சேவையினூடாக நிலையானதோர் அபிவிருத்தி "

எங்கள் பணி

" அரசாங்க கொள்கைகளுக்கு அமைவாக சேவைகளை வழங்குதல்இ வளங்களை ஒருங்கிணைத்தல் மற்றும் மக்களின் பங்கேற்புடன் திறமையானஇ நிலையான மற்றும் திட்டமிடப்பட்ட அபிவிருத்தி செயல்முறை ஒன்றின் மூலம் அப்பிரதேச மக்களின்; வாழ்வாதாரத்தை மேம்படுத்தல் "

வரலாறு

நிறுவனத்தின் பரிணாமம்

அமைவு

இலங்கைஇ மத்தியமலைநாட்டில் அமைந்துள்ள மாத்தளை மாவட்டத்தின் தென்மேற்கு பகுதியில் மாத்தளை இகுருநாகல்இகலேவல மற்றும் மாத்தளை –தம்புள்ளை பிரதான வீதியில் அமைந்துள்ள யடவத்த பிரதேச செயலக பிரிவானது வடக்கில் பல்லேபொலஇ கிழக்கில் மாத்தளை தெற்கில் உக்குவளை போன்ற பிரதேச செயலகங்களையும் மேற்கில் குருநாகல் மாவட்டத்தினையும் எல்லையாக கொண்டுள்ளது.

யடவத்த பிரதேச செயலக பிரிவானது கிழக்கில் மக்குலுஸ்ஸஇ அஸ்கிரியஇ ரிதிகல  போன்ற மலைதொடர்களினாலும் மேற்கில் நக்கில்ஸ் மலைத்தொடரினாலும் மத்தியில் மாத்தளையிலிருந்து செல்லும் யடவத்த பாவுல் மலைத்தொடரினாலும்இ தெற்கில் எட்டிபொல மற்றும் ஒவிலிகந்த என்னும் மலைதொடர்களினாலும்இ வடக்கில் எம்பக்க மலைத்தொடரின் தெற்கு எல்லையினாலும்  சூழப்பட்ட வளமான சூழலை கொண்ட ஓர் படுகை ( பேசின் ) என அழைக்கப்படுகிறது.

இந்த பிரதேசம் கடல் மட்டத்திலிருந்து சராசரியாக 400-1250 மீட்டர் உயரத்தில் சாதாரண வெப்பநிலையுடன் காணப்படுவதுடன் எட்டிபொல மலைதொடர்இ மக்குலுஸ்ஸ மலைதொடர் உட்பட பெரண்டிகலஇஎதாகலஇ ஹுலன்கல போன்ற மலைதொடர்கள் பிரதேசத்தின் இயற்கை அழகை மேலும் மெருகூட்டுவதாக அமைந்துள்ளது.

நீர் பாசன முறை (நீர் வநியோகத்தில்)

நாலன்த ஓயா யடவத்த பிரதேசத்தை சுற்றி ஓடும் பிரதான ஆறாக காணப்படுவதுடன் பொல்வத்த ஓயா உட்பட  எத்திபொல மலைத்  தொடர் மற்றும் ஏனைய மலைதொடர்களிலிருந்து ஆரம்பமாகும் சிறிய நீர் வீழ்ச்சிகள் பல வடமேற்கு திசையை நோக்கி பாய்கின்றன. அவை தெதுரு ஓயாவில் ஆரம்பமாகும் நீர் ஊற்றுக்களாகும்.

காலநிலை முறை

காலநிலை வலயங்களின் அடிப்படையில்இ யடவத்த பிரதேசம் மத்திய மலைநாட்டின் மத்தியிலும் ஈர வலயத்தின்  மத்தியிலும் அமைந்துள்ளது. இந்த பிரதேசத்தின் சராசரி மழைவீழ்ச்சி 160.8 மில்லிலீட்டர்களாகும். மேலும் செப்டெம்பர் மாதம் தொடக்கம் ஜனவரி மாதம் வரை வடகிழக்கு பருவக்காற்று மழை மற்றும் ஜுன் மாதம் தொடக்கம் தென்மேற்கு பருவக்காற்று மழையும் இப்பகுதிக்கு கிடைக்கப்பெறுகிறது. பொதுவாக சராசரி வெப்பநிலை 28-36 பாகை செல்சியசாக காணப்படும்.

பாறை மற்றும் கனிம வளங்கள்

இளங்கபில நிற மண் மற்றும் செங்கபில நிற மண்இப்பிரதேசத்தில் பரவலாக காணப்படுகிறது. யடவத்த பிரதேச மேட்டுநிலப்பகுதி கற்பாறைகளால் ஆனது மற்றும் மாத்தளாப்பிடிநிற்கு அருகில் உள்ள எட்டிபொல மேட்டுநிலப்பகுதியில் மைக்கா படிவுகளும் உள்ளன.

நிர்வாக முறை

1815 இல் கண்டி இரசதாணியில் மாத்தளை மாவட்டம் மூன்று பிரிவுகளில் பிரிக்கப்பட்டது.அவை மாத்தளை வடக்கு, தெற்கு,  கிழக்கு என்றும், அதில் மாத்தளை தெற்குப்பகுதியில் யட்டவத்த பிரதேசம் அமைந்துள்ளது.1955 இல் மாத்தளை நிர்வாக மாவட்டம் தனித்து மாத்தளை பிரதேசச்செயலகமாகவும் அதன் கீழாக இருந்த​ யட்டவத்த பிரதேசம் 1985 இல் யட்டவத்த பிரதேசச்செயலகப்பிரிவாக உருவாக்கப்பட்டது.

யடவத்த பிரதேச செயலகத்தின் பரப்பளவு 65.7 சதுர கிலோமீட்டர்களாகும். 144 கிராமங்களை உள்ளடக்கிய 56 கிராம உத்தியோகத்தர்களை கொண்ட இந்த பிரதேச செயலக பிரிவானது யடவத்த பிரதேச செயலகத்தினால் நிருவகிக்கப்பட்டு வருகிறது. கமத் தொழில் மற்றும் கமநல நடவடிக்கைகளுக்காக யடவத்த மற்றும் வாலவெல என இரண்டு விவசாய அபிவிருத்தி பிரதேசங்கள் பிரிக்கப்பட்டுள்ளன. பழைய நிர்வாக பிரிவின் கீழ் அஸ்கிரிய கோரளே என பெயரிடப்பட்டிருந்த இந்த பிரதேசம் அஸ்கிரி உதசிய இ பல்லேசிய என இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த பிரிவுகளின் பிறப்புஇ இறப்பு மற்றும் விவாக பதிவுகள் இப் பிரிவுகளின் அடிப்படையில் பதியப்பட்டு வருகிறது.

வரலாற்றுப் பிண்ணணி 

யட்டவத்த பிரதேசச் செயலாளக  பிரிவின் வரலாற்றுப் பிண்ணனி மகா போதி விரூட்சகம்  இலங்கைக்கு கொண்டுவரப்பட்டதிலிருந்து ஆரம்பமாகிறது. மாத்தளை கடயிம புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதன் படிஇ மகா போதி விரூட்சகத்துடன் இலங்கைக்கு வருகை தந்த ஆரிய மக்கள் குடியோறிய இடமாக தீவில்ல கருதப்படுவதுடன்இ அந்த குழுவின் தலைவன் ருவன் வில்லியா என கூறப்படுகிறது. குடியோற்றம் இல்லாத பகுதிகளில் மக்கள் குடியோறியதன் பின்னர் முதலாவது கிராமமாக மாறியதனால் அவை ‘முல்கம’ என்று அழைக்கப்பட்டு பின்னர் பேச்சு வழக்கில் ‘கம்முல்ல’ என்று பெயர்பெற்றது.

உடகம பெலும் கல்லிற்கு மேல் செல்லும் பிசோ எல்லயிற்கு அருகில்  விக்கிரமபாகு மனன்னின் அந்தப்புர மாளிகை காணப்பட்டதுடன் அரசன் போரில் தோல்வியடைந்துவிட்டான் என்று கிடைக்கப்பட்ட வதந்தியினால் துக்கத்தில் மூழ்கிய 60 இராணிகள்(பிசோவரு) இந்த நீர்வீழ்ச்சியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டனர். இதனால் இந்த நீர்வீழ்ச்சி ‘பிசோ எல்ல’ என்னும் பெயரில் பிரபல்யமடைந்தது.

உருலேவத்த ரஜமகா  விகாரையில் உள்ள குகை சிற்பங்கள் கீர்தி ஶ்ரீ ராஜசிங்க மன்னனால் உருவாக்கட்டப்பட்டதகவும்இ தல்கஹா கொட ரஜமகா விகாரையில் உள்ள குகை சிற்பங்கள் மற்றும்  போதி மர நடுகை என்பவை தேவநம்பியதிஸ்ஸ மன்னனரின் காலத்தில் நடைபெற்றதற்கான சான்றுகள் உள்ளன.  அதே போன்று கம்முல்லஇ தீவில்லஇ கொஸ்கொல்ல போன்ற அம்பலங்களும் இப் பகுதியின் வரலாற்று சிறப்புக்கு சாட்சியாக  உள்ளன.

இலங்கையின் மாத்தளை மாநகரத் தலைவரும்(1927-1931)வரையான காலப்பகுதியில் இலஙகையின் முதலாவது  சிங்கள ஆளுநராகவும் முதலாவது ஜனாதிபதியாகவும் இருந்த  திரு ஶ்ரீமத் வில்லியம் கொபல்லாவயின் பிரப்பிடமும் வசிப்பிடமும் துல்லாவ பிரதேசமாகும் அவர் தனது  ஆரம்பகாலப் படிப்பை துல்லாவ மகா வித்தியாலயத்தில் கற்றார்

பழங்காலத்திலிருந்தே இந்த பிரிவு அதன் கலை படைப்புகளுக்கு பிரசித்திபெற்றது. அவற்றுள் உனவேறுவயில் அவ்அத்து சேசத் மற்றும் லாக்சா தொழில்கள் முக்கிய இடத்தை பெற்றுள்ளன. ரீ மஹா போதியின் வருகையுடன் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வந்த தொழில்களில் ஒன்றாக கருதப்படும் இத்தொழிலின் முன்னோர்களின் தாயகமாக உனவெருவை இருந்ததுடன்இ அந்த தலைமுறையின் சந்ததியினர் இன்றும் சேசத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். ஆலோககம பின்னல் கைத்தொழிலிற்கும்இ தல்கஹாகொட மற்பாண்டம் கைத்தொழிலிற்கும் இசெலகம அழங்காரமிடல் கைத்தொழிலிற்கும்இ துல்லாவ கொல்லன் கைத்தொழிலிற்கும் பிரசித்திபெற்றது. அதேபோன்று யாடவத்த பிரதேசம் பழங்காலத்திலிருந்தே கண்டிய நாடனக் கலைக்கு பெயர் பெற்றதுடன்இ உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பிரபல ஜனாதிபதி விருதுகளை வென்ற திறமைமிக்க நடனக் கலைஞர்கள் தல்கஹகொட பிரதேசத்தில் வசிக்கின்றனர். இவ்வாறான வரலாற்று சிறப்புகள் நிறைந்த யாடவத்த பிரதேசம் ஒரு சிறந்த வரலாற்றுஇ மதஇ கல்வி மற்றும் கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகும்.

   

வரைபடங்கள்

Picture3 Picture4 2 Picture5
4 web1 1 2

பணியாற்றிய பிரதேச செயலாளர்கள்

No Name From To
01.   திரு. டி.ஜி.யு.பி. தம்புகல 1986.03 1987.06
02.   திரு. ஆர்.ஏ. சந்திரசேகர 1987.07 1992.08
03.   திரு. கே.டபிள்யூ. கமகே 1992.09 1993.12
04.   திரு. டி.எம்.ஆர்.பி. திசாநாயக்க 1994.01 1994.12
05.   திரு. பி.ஏ.ஜி. ஜெயவர்தன 1995.01 1996.12
06.   திரு. ஏ.பி.டபிள்யூ. ஆரியவன்ஷ 1997.01 1998.05
07.   திரு. பி.எல். நந்தசிறி 1999.01 2006.03
08.   திரு. ஏ.எம்.டபிள்யூ.ஏ. அமுனுகம 2006.04 2007.03
09.   திரு. எஸ். சேனாநாயக்க 2007.04 2007.08
10.   திரு. சிறிமேவன் தர்மசேன 2007.08 2010.09
11.   திரு. ஜி.எச்.எம்.ஏ.பிரேமசிங்க 2010.09 2011.04
12.   திரு. ஏ.எம்.ஜே.கே.என். அதிகாரி 2011.04 2016.10
13.   திருமதி.டி.ஆர்.கே. ஹென்நாயக்க 2016.12 2023.07 
14.   திருமதி. எச்.எம்.எம்.சி.பி. ஹிந்தகொட 2024.01 2025.08
15.   திருமதி. டபிள்யூ.எஸ்.பி. விக்ரமஆராச்சி 2025.10 Up to Now

News & Events

குடியுரிமை சாசனம்

Scroll To Top